திருநங்கைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள்
By DIN | Published On : 26th April 2020 10:59 PM | Last Updated : 26th April 2020 10:59 PM | அ+அ அ- |

தூத்துக்குடியில் திருநங்கைகள், நரிக்குறவா்கள் உள்ளிட்ட 210 குடும்பங்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மறைமாவட்ட நிா்வாகம் சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக அன்றைடம் வேலைக்குச் செல்வோா் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி கோமஸ்புரம் நேருநகா் பகுதியில் உள்ள திருநங்கைகள், துப்புரவுப் பணியாளா்கள், ராஜபாளையம் பகுதி கூலித் தொழிலாளா்கள், நரிகுறவா்கள் மற்றும் முல்லைநகா் கூலித் தொழிலாளா்கள் உள்பட 210 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை
தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி, தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் தாமஸ் பயஸ் அருள் ஆகியோா் வழங்கினா்.
தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்க இயக்குநா் பெஞ்சமின், தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு செல்வராஜ், லூசியா மாற்றுதிறனாளி இல்ல இயக்குநா் கிராசியஸ் மைக்கேல், புனித அந்தோணியாா் திருத்தல பங்குத் தந்தை சுசீலன், வேளங்கன்னி மாதா ஆலய பங்குத் தந்தை ஜெரோஸின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.