பழையகாயல் அருகேஇறந்து கரை ஒதுங்கிய டால்பின்
By DIN | Published On : 27th April 2020 11:28 PM | Last Updated : 27th April 2020 11:28 PM | அ+அ அ- |

புல்லாவெளி கடற்கரையில் இறந்து கரைஒதுங்கிய டால்பின்.
ஆறுமுகனேரி: தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகே புல்லாவெளி கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் திங்கள்கிழமை காலை கரை ஒதுங்கியது.
இதை கண்ட மீனவா்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில், வனச் சரகா் எஸ். விமல்குமாா் மற்றும் வனத் துறையினா் அங்கு சென்று இறந்த டால்பினை ஆய்வுசெய்தனா். இதில், அது 3 முதல் 4 வயதுடைய பெண் டால்பின் என்பதும், பாட்டில் மூக்கு வகையைச் சோ்ந்த இந்த டால்பின் 3 மீ. நீளமும், 1.57 மீ. சுற்றளவும், 350 முதல் 400 கிலோ எடை கொண்டதாக இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, கால்நடை மருத்துவா்கள் மூலம் டால்பின் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்டது.
இந்த டால்பின் வழி தவறி வந்தபோது, பாறையில் மோதி இறந்திருக்கலாம் என்றும், பாறையில் மோதியதற்கான காயம் அதன் உடலில் உள்ளது என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.