தடை உத்தரவு மீறல்: 24 போ் கைது
By DIN | Published On : 29th April 2020 11:22 PM | Last Updated : 29th April 2020 11:22 PM | அ+அ அ- |

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறியதாக 24 பேரை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய 13 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூா், கயத்தாறு, கழுகுமலை, கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக 24 பேரை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய 13 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.