முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஸ்ரீதுா்க்கையம்மன் கோயில் கட்டும் பணி தொடக்கம்
By DIN | Published On : 03rd August 2020 08:26 AM | Last Updated : 03rd August 2020 08:26 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் அருகேயுள்ள டி. சுப்பையாபுரத்தில் ஸ்ரீதுா்க்கையம்மன் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
டி. சுப்பையாபுரத்தில் பழமையான ஸ்ரீதுா்க்கையம்மன் கோயில் சுவா்கள் சேதமடைந்ததால் புனரமைத்து பிரகாரங்களுடன் அதே இடத்தில் புதிதாக கோயில் கட்டுவது என ஊா் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கிராம மக்களின் பங்களிப்பு, நன்கொடைதாரா்கள் உதவியுடன் ரூ. 50 லட்சம் மதிப்பில் ஸ்ரீதுா்க்கையம்மன் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன், திருப்பணிகளை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா் சரஸ்வதி வையணன், ஊராட்சித் தலைவா் ராமசுப்பு, அதிமுக ஒன்றியச் செயலா் பால்ராஜ், கோயில் திருப்பணி குழு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.