பிரகாசபுரம் ஆலய திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 07th August 2020 08:50 AM | Last Updated : 07th August 2020 08:50 AM | அ+அ அ- |

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழாகொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா பொதுமுடக்கத்தினால் பங்கு மக்களின்றி பங்குத் தந்தை அந்தோணி இருதய தோமாஸ் தலைமையில் தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜ் கொடியேற்றினாா். முன்னதாக சிறப்பு ஜெபமாலை நடை பெற்றது.
நிகழ்ச்சியில், பங்குத் தந்தை லியோ ஜெயசீலன், பிரகாசபுரம் சி.எஸ்.ஐ. பங்குத் தந்தை ஜெபவீரன் உள்பட பங்கு மக்கள் ஒரு சிலா் கலந்து கொண்டனா்.