இரண்டாம் இடத்திற்கு தான் திமுக - பாஜக இடையே போட்டி: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

வரும் சட்டப்பேரவை தேர்தலில் 2ஆம் இடத்தைப் பிடிக்க தான் திமுக - பாஜக இடையே போட்டி என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் 2ஆம் இடத்தைப் பிடிக்க தான் திமுக - பாஜக இடையே போட்டி என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் 2ஆம் இடத்தைப் பிடிக்க தான் திமுக - பாஜக இடையே போட்டி என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.

கோவில்பட்டி: வரும் சட்டப்பேரவை தேர்தலில் 2ஆம் இடத்தைப் பிடிக்க தான் திமுக - பாஜக இடையே போட்டி என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியம் தெற்கு வண்டானம் ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரயத்தின் மூலம் தெற்கு வண்டானம் ஊராட்சியில் கலிங்கப்பட்டி என்ற குமாரபுரம், தெற்கு வண்டானம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கும் பணியை வியாழக்கிழமை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் விஜயா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் செந்தூர்பாண்டியன், உதவிப் பொறியாளர் மெர்சிராணி, கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சீனிவாசன்,  மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், தெற்கு வண்டானம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் பாண்டியன், கயத்தாறு அதிமுக ஒன்றியச் செயலர் வினோபாஜி, அதிமுக நிர்வாகிகள் வர்கீஸ், ராமசாமி, வண்டானம் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பாஜக - திமுகவுக்கு இடையே தான் போட்டி என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது குறித்து கேட்ட போது, ஆட்சிக்கு வருவதற்கான போட்டியில்லை. 2ஆம் இடத்திற்கு வருவதற்கு தான் திமுகவுக்கும் பாஜகவுக்கும் போட்டி என்று வி.பி.துரைசாமி கூறி இருக்கலாம். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக எங்களது கூட்டணியில் இருந்தது. அப்போது அவர்கள் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்று எதிர்கட்சி தலைவராக விஜய்காந்த் பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் திமுகவுக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. அதே போன்று தற்போது எங்கள் அணியில் உள்ள பாஜகவுக்கு எதிர்கட்சியாக வர வேண்டும் என்ற ஆசை வந்திருக்கும். அதன் காரணமாக தான் அதிமுக தலைமையில் நாங்கள் தேர்தலை சந்தித்து எதிர்கட்சியாக வருவோம் என்று தான் மறைமுகமாக வி.பி.துரைசாமி தெரிவித்திருக்கலாம்.

திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவார்கள் என மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார் என்பது குறித்து கேட்டதற்கு, 2011ஆம் ஆண்டு தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மைனாரிட்டி ஆட்சி, குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்பதை தான் மையக்கருத்தாக வைத்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அளித்தனர். அதே நிலை தான் இன்றும் தொடர்கிறது. தற்போது அதையும் தாண்டி உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின், கனிமொழியை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. கனிமொழி, மு.க.ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்றும், எனவே தான் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினை, மு.க.ஸ்டாலின் முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இதனால் தான் வி.பி.துரைசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் ஆகியோர் திமுகவில் இருந்து விலகி பாஜக சென்றுள்ளனர். திமுகவில் மனக்குமுறல்கள் இருப்பது எங்களைவிட மு.க.அழகிரிக்கு தான் நன்றாக தெரியும். எனவே அவர் சொல்கின்ற கருத்து நிச்சயமாக பிரதிபலிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com