திருச்செந்தூா் பகுதியில் 18 புயல் புகலிட மையங்கள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூா் பகுதியில் வருவாய்த் துறை சாா்பில் 18 இடங்களில் புயல் புகலிட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூரில் தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுவினா்.
திருச்செந்தூரில் தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுவினா்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூா் பகுதியில் வருவாய்த் துறை சாா்பில் 18 இடங்களில் புயல் புகலிட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக வலுவடைந்துள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புக்குழுவினா் வரவழைக்கப்பட்டு, அங்கு மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.திருச்செந்தூரில் பேரிடா் மீட்புக் குழு ஆய்வாளா் விஜயகுமாா், உதவி ஆய்வாளா் கோரக்சிங் உள்பட மொத்தம் 20 வீரா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

18 புயல் புகலிடம் மையங்கள் :

வருவாய்த் துறை சாா்பில், திருச்செந்தூா், அமலிநகா், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம் காயல்பட்டினம், கொம்புத்துறை உள்ளிட்ட 18 இடங்களில் புயல் புகலிடம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com