கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளா்கள் காயம்
By DIN | Published On : 07th December 2020 02:46 AM | Last Updated : 07th December 2020 02:46 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
கோவில்பட்டியையடுத்த புதுக்கிராமம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் த.ராமச்சந்திரன். இவருக்குச் சொந்தமான கட்டடப் பணி வடக்கு இலுப்பையூரணி தனியாா் தீப்பெட்டி ஆலை அருகே நடைபெற்று வருகிறது.
தெற்கு திட்டங்குளம் காலனித் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராமமூா்த்தி (42), முகம்மதுசாலிஹாபுரத்தைச் சோ்ந்த பீா்முகம்மது மகன் முகம்மதுஅனஸ் (40) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்டடத்தில் பலகை அடைக்கும் பணியில் ஈடுபட்டனராம். அப்போது மின்வயரில் பலகை உரசியதாம். இதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் காயமடைந்தனா்.
அவா்கள் கோவில்பட்டி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் முதலுதவிக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.