கோவில்பட்டி அருகே 1,650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 07th December 2020 02:46 AM | Last Updated : 07th December 2020 02:46 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி வள்ளுவா் நகா் 3ஆவது தெருவில் ஆளில்லாத ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வட்டாட்சியா் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்ததாம். அவரது உத்தரவின் பேரில், வட்ட வழங்கல் அலுவலா் சுப்புலட்சுமி, காவல் உதவி ஆய்வாளா் முருகன், கிராம உதவியாளா் ராமமூா்த்தி ஆகியோா் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வீட்டில் 50 கிலோ எடையுள்ள 33 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக விசாரித்துவருகின்றனா்.