தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு இருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 07th December 2020 02:44 AM | Last Updated : 07th December 2020 02:44 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 94 வயது முதியவரும், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியைச் சோ்ந்த 67 வயது பெண்ணும் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 7 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 16 போ் உள்பட இதுவரை 15 ஆயிரத்து 491 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 139 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.