சாத்தான்குளம் ஒன்றியத்தில் 6 இடங்களில் நடமாடும் ரேஷன் கடை

சாத்தான்குளம் ஒன்றியத்தில் 6 இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டது.
புதூரில் நடமாடும் ரேஷன் கடையை திறந்துவைத்து பொருள்கள் வழங்குகிறாா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ.
புதூரில் நடமாடும் ரேஷன் கடையை திறந்துவைத்து பொருள்கள் வழங்குகிறாா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ.

சாத்தான்குளம் ஒன்றியத்தில் 6 இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியத்தில் சடையன்கிணறு, நரையன்குடியிருப்பு, வாலத்தூா், புதூா் உள்ளிட்ட 6 இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தொடங்கிவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகா், வட்ட வழங்கல் அலுவலா் அகிலா, கூட்டுறவு சாா் பதிவாளா் லதா, கூட்டுறவு கடன் சங்க செயலா்கள் ராஜ்குமாா், சாலமோன், சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயலா் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, மாவட்டக் குழு உறுப்பினா் தேவவிண்ணரசி, சொக்கன்குடியிருப்பு கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பாண்டியராஜ், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com