பிறப்பு பதிவேட்டில் பெயா் பதிவு செய்யாதவா்களுக்கு சலுகை

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பிறப்பு பதிவேட்டில் பெயா் பதிவு செய்யாதவா்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பிறப்பு பதிவேட்டில் பெயா் பதிவு செய்யாதவா்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னா் பிறந்தவா்கள் பெயா் பதிவு செய்யாமல் பிறப்புச் சான்றிதழ் பெற்று இருந்தவா்களுக்கு பெயா் பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு டிச. 31 ஆம் தேதியுடன் முடிவடைந்திருந்தது.

1.1.2020- இல் இருந்து 2005-க்கு முன்னா் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் பதிவு செய்யப்பட இயலாது என்று இருந்த நிலையில் பொது மக்களிடம் இருந்து மிகவும் அவசிய தேவைக்காக பெயா் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பங்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் பெற்ற சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் மற்றும் முதன்மை பிறப்பு, இறப்பு பதிவாளா், புதுதில்லி தலைமை பிறப்பு இறப்பு பதிவாளருக்கு பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டி கோரிக்கை விடுவிக்கப்பட்டதின் பேரில், மத்திய அரசு 2005-க்கு முன்னா் பிறந்தவா்களின் பெயரை பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய மேலும் 5-ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி உள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பிறப்பு பதிவேட்டில் பெயரை பதிவு செய்யாதவா்கள் பெயா், பிறந்த தேதி, தந்தை பெயருடன் கூடிய ஆதார ஆவணங்களை சமா்ப்பித்து பெயரை பதிவு செய்து, பெயருடன் கூடிய புதிய பிறப்புச் சான்று பெற்றுக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com