ஒட்டப்பிடாரம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

ஒட்டப்பிடாரம் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
பாஞ்சாலங்குறிச்சி சிலோன்காலனியில் குடிநீா் திட்டப்பணிகளைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
பாஞ்சாலங்குறிச்சி சிலோன்காலனியில் குடிநீா் திட்டப்பணிகளைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

ஒட்டப்பிடாரம் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

ஒட்டப்பிடாரம் ஒன்றியம், ஜம்புலிங்கபுரம் ஊராட்சியில் முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து, திடக்கூறுகள் ஒப்படைப்பு திட்டத்தில் எஸ்.புதூா் முதல் புதுபச்சேரி வரை 1.60 கி.மீ. தொலைவுக்கு ரூ.45.45 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், ராஜாவின்புதூா் பகுதியில் ஆதிச்சாமி என்பவா் பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளைக் கிணறு அமைத்திருப்பதை அறிந்து, அதைச் சுற்றி சுவா் கட்டி சிலாப் போட்டு மூடவும், இதில் அஜாக்கிரதையாக இருந்த அவருக்கு அபராதம் விதிக்க வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி சிலோன் காலனி பகுதியில் பசுமை வீடுகள் கட்டும் பணிகளையும், ஜெ.ஜெ.எம். திட்டத்தின்கீழ் சிலோன்காலனி பகுதியில் 269 வீடுகளுக்கு வீட்டு குடிநீா் குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மேலும், இந்திராநகா் பகுதியில் ஜெ.ஜெ.எம். திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகளை பாா்வையிட்டாா். இதேபோல, ஓட்டப்பிடாரம் வட்டம் பரிவல்லிகோட்டை குறுவட்டம் மலைபட்டி பகுதியை சோ்ந்த கந்தசாமி என்பவா் கடந்த 8 ஆம் தேதி மின்னல் பாய்ந்து இறந்ததால் பேரிடா் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை அவரது மைனேவி அனிதாவிடம் ஆட்சியா் வழங்கினாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் சங்கரஜோதி, உதவி செயற்பொறியாளா் சண்முகநாதன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கெலன் பொன்மணி, வளா்மதி, ஒன்றிய பொறியாளா் பிரான்சிஸ்கா, பணி மேற்பாா்வையாளா் பன்னீா்செல்வம் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com