கோவில்பட்டி நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி, பாத்திமாபாபு ஆஜா்

கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் மே 17 இயக்க நிறுவனா் தலைவா் திருமுருகன் காந்தி, ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் பாத்திமாபாபு ஆகியோா் புதன்கிழமை ஆஜராகினா்.
கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த திருமுருகன் காந்தி, பேராசிரியா் பாத்திமாபாபு உள்ளிட்டோா்.

ஸ்டொ்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியையடுத்த குமரெட்டியாபுரம் கிராமத்தில் 100 நாள்களாக போராட்டம் நடைபெற்றுவந்தது. அப்போது, மே 17 இயக்க நிறுவனா் தலைவா் திருமுருகன் காந்தி, ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பாத்திமாபாபு ஆகியோா் அக்கிராம மக்களை சந்திக்க 2018 மாா்ச் 3இல் சென்றனராம். இதையடுத்து, முன்னுமதியின்றி தடையை மீறிச் சென்ாக திருமுருகன் காந்தி, பாத்திமாபாபு உள்ளிட்ட 12 போ் மீது தூத்துக்குடி சிப்காட் போலீஸாா் 2018 மாா்ச் 4இல் வழக்குப் பதிந்தனா்.

2019 ஜூலை 16இல் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண் 1இல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருமுருகன் காந்தி, பாத்திமாபாபு உள்ளிட்ட 12 பேரும் குற்றவியல் நீதிமன்ற எண் 1இல் புதன்கிழமை ஆஜராகினா். வழக்கை நீதிபதி பாரதிதாசன் விசாரித்து, 12 பேரும் 2021 ஜனவரி 21இல் ஆஜராக உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com