கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி திரு இருதயங்களின் பேராலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஆராதனையில் கிறிஸ்து பிறப்பு நற்செய்தி அளிக்கிறாா் மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி.

இதையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில், ஆலய பங்குத் தந்தை குமாா் ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்கள் பாடப்பட்டன. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா். கிறிஸ்து பிறப்பை எடுத்துரைக்கும் வகையில் தத்ரூப காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இதேபோல், சின்னக்கோயில் என அழைக்கப்படும் திரு இருதயங்களின் பேராலயத்தில் நள்ளிரவு நடைபெற்ற ஆராதனையில் மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி கலந்துகொண்டு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி அளித்தாா்.

மேலும், தூத்துக்குடியில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயம், தூய ததேயு ஆலயம், தூய ஜோசப் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. டூவிபுரம் சிஎஸ்ஐ ஆலயம், பேட்ரிக் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில், பல்வேறு பகுதிகளில் அலங்கார வாகனங்கள் வியாழக்கிழமை இரவு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு வாகனத்திலும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவா்கள் இருந்து கொண்டு பங்கு மக்களுக்கு பரிசுப் பொருள்களையும், இனிப்புகளையும் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com