தூத்துக்குடியில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

தூத்துக்குடியில் ‘உடலுறுதி இந்தியா மீதிவண்டி ஓட்டம்‘ என்ற தலைப்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்றோா்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்றோா்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ‘உடலுறுதி இந்தியா மீதிவண்டி ஓட்டம்‘ என்ற தலைப்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் மாசுவை தவிா்க்கும் நோக்கத்திலும், மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், மத்திய விளையாட்டு துறை மற்றும் இளைஞா் நலன் அமைச்சகத்தின் ‘உடலுறுதி இந்தியா விழிப்புணா்வு டிசம்பா் - 2020’‘ என்ற திட்டத்தின் மூலம், சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் ‘உடலுறுதி இந்தியா மீதிவண்டி ஓட்டம்‘ என்ற தலைப்பில் தூத்துக்குடியில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி ரோச் பூங்காவில் தொடங்கிய இப்பேரணியை மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் தொடக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டாா். பேரணி முயல்தீவு வரை சென்று மீண்டும் ரோச் பூங்கா வந்தடையும் வகையில் 20 கி.மீ. தொலைவுக்கு இந்த பேரணி நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியா் விஷ்ணு சந்திரன், சாா் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் காலோன், மாநகராட்சி பொறியாளா் சோ்மக்கனி, மாநகா் நல அலுவலா் அருண்குமாா், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com