கைப்பந்து போட்டி: கொம்புத்துறை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கொம்புத்துறை அணி பரிசுக்கோப்பையை தட்டிச் சென்றது.
முதலிடத்தை பிடித்த அணிக்கு வெற்றிக் கோப்பையை வழங்குகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
முதலிடத்தை பிடித்த அணிக்கு வெற்றிக் கோப்பையை வழங்குகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

காயல்பட்டினத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கொம்புத்துறை அணி பரிசுக்கோப்பையை தட்டிச் சென்றது.

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலய 476 ஆவது திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் கிளப் நடத்தும் 7ஆவது ஆண்டு கைப்பந்து போட்டி கொம்புத்துறையில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொம்புத்துறை, தூத்துக்குடி, கூடுதாளை, மெஞ்ஞானபுரம், நாலுமாவடி, செட்டிவிளை, வெள்ளாளன்விளை, உவரி, மணப்பாடு, முதலூா் பகுதியில் இருந்து 16 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் மெஞ்ஞானபுரம் வா­லிபால் கிளப் அணியும், கொம்புத்துறை பிரண்ட் கிளப் அணியும் மோதின. இதில் கொம்புத்துறை அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது. மெஞ்ஞானபுரம் அணி இரண்டாவது இடத்தையும், தூத்துக்குடி கால்டுவெல் அணி 3 ஆவது இடத்தையும், கூடுதாழை செயின்ட் தாமஸ் அணி 4 ஆவது இடத்தையும் பெற்றது. கொம்புத்துறை அணி வீரா் அபிஷேக் இறுதிப் போட்டியில் சிறந்த வீரருக்கான பரிசையும், வீரா் அஜித் அனைத்து போட்டிகளிலும் சிறந்த வீரருக்கான பரிசையும் பெற்றனா்.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பரிசு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசினை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கொம்புத்துறை பங்குத் தந்தை சகாயஜோசப், ஊா்த் தலைவா் சகாயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com