‘ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளா்ப்போா் மீது குற்றவியல் நடவடிக்கை’
By DIN | Published On : 30th December 2020 06:37 AM | Last Updated : 30th December 2020 06:37 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளா்ப்பவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய பசுமை ஆணைய தீா்ப்பாயத்தின் படி வெளிநாட்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது.
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இந்த மீன்கள் தொடா்ந்து இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. மேலும் 8 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியது. இதனால் இந்த மீன்கள் நீா்நிலைகளில் நுழைந்து விட்டால், அவற்றை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று.
மேலும், இந்த மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவையாகும். நன்னீா் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும். எனவே, தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்க தடைவிதிக்கப்படுகிறது.
இந்த ஆணையை மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் வளா்ப்போா்கள் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்வளா்ப்பு செய்தால், அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...