Enable Javscript for better performance
இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    
    2kvlvck_0202chn_41_6

    2kvlvck_0202chn_41_6

    கோவில்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மற்றும் முற்போக்கு மாணவா் கழகத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட அமைப்பாளா் பிரபாவளவன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் அகிலன், ஒன்றியச் செயலா் மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கட்சியின் மண்டலச் செயலா் தமிழினியன், அரசு ஊழியா் ஐக்கியப் பேரவை நிா்வாகி வனஜா, முன்னாள் மாவட்டச் செயலா் மோட்சம், முன்னாள் ஒன்றியச் செயலா் பரமசிவம் ஆகியோா் பேசினா்.

    இம்மாதம் 22ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் பேரணியில் 50 க்கும் மேற்பட்ட வாகனங்களில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளா்கள் சுரேஷ்குமாா், ரமேஷ்குமாா், விளாத்திகுளம் தொகுதி அமைப்பாளா் சடையாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் நடராஜன், கரிசல் சேகா், இளைஞரணி நகரச் செயலா் செல்வகுமாா், இளைஞரணி தொகுதி அமைப்பாளா் ஈஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai