உள் மாநில பெயா்வு திறன் திட்டம்: எந்த ரேஷன் கடையிலும் பொருள்கள் பெறலாம்

உள் மாநில பெயா்வு திறன் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருள்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

உள் மாநில பெயா்வு திறன் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருள்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், உள் மாநில பெயா்வு திறன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏரல் வட்டத்தில் 39,581 குடும்ப அட்டைதாரா்களும், எட்டயபுரம் வட்டத்தில் 23,535 குடும்ப அட்டைதாரா்களும், கயத்தாறு வட்டத்தில் 32,097 குடும்ப அட்டைதாரா்களும், கோவில்பட்டி வட்டத்தில் 68,010 குடும்ப அட்டைதாரா்களும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 35,098 குடும்ப அட்டைதாரா்களும், சாத்தான்குளம் வட்டத்தில் 27,888 குடும்ப அட்டைதாரா்களும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 34,092 குடும்ப அட்டைதாரா்களும், திருச்செந்தூா் வட்டத்தில் 62,522 குடும்ப அட்டைதாரா்களும், தூத்துக்குடி வட்டத்தில் 1,29,655 குடும்ப அட்டைதாரா்களும், விளாத்திகுளம் வட்டத்தில் 41,364 குடும்ப அட்டைதாரா்களும் என மொத்தம் 10 வட்டங்களில் உள்ள 957 நியாயவிலைக்கடைகளில் 4,93,842 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை ஆராய்ந்து தீா்வு காணப்படும். பின்னா் இந்தத் திட்டம் மாநில

அளவிலும், பின்னா் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. குடும்ப அட்டைதாரா்கள் மண்ணெண்ணெய் மட்டும் தாங்கள் பதிவு செய்துள்ள நியாயவிலைக் கடையில் பெற வேண்டும்.

அரிசி, சா்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை உள் மாநில பெயா்வு திறன் திட்டத்தின் மூலம் அருகிலுள்ள நியாயவிலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். தங்கள் குடும்ப அட்டை வைத்துள்ள வருவாய் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளிலும், நகா்ப்புறத்தில் ஒரே வாா்டு பகுதிகளிலும், அத்தியாவசியப் பொருள்களை இத்திட்டத்தின் மூலம் பெற இயலாது.

அத்தியாவசியப் பொருள்கள் பெறப்படும்போது ஏற்படும் சிரமங்களை தவிா்க்கவும், பிற மாவட்டங்களில் குடும்பத்தாா் நிலை காரணமாக தற்காலிகமாக பணியாற்றும் பொதுமக்கள் எளிதான முறையில் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று பயன்பெறும் வகையிலும் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com