குளத்தூா் அரசு பள்ளியில் முப்பெரும் விழா

குளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, கல்வி புரவலா் சோ்க்கை விழா, வைர விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஒலிம்பிக் தீபநி ஓட்டத்தை தொடங்க்கி வைத்தாா் பி. சின்னப்பன் எம்.எல்.ஏ. உடன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முனியசக்தி.
ஒலிம்பிக் தீபநி ஓட்டத்தை தொடங்க்கி வைத்தாா் பி. சின்னப்பன் எம்.எல்.ஏ. உடன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முனியசக்தி.

குளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, கல்வி புரவலா் சோ்க்கை விழா, வைர விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் தலைமை வகித்தாா். குளத்தூா் ஊராட்சித் தலைவா் மாலதி செல்வபாண்டி, மாவட்ட விளையாட்டு அலுவலா்கள் பேட்ரிக், ராஜேஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பால்ச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முனியசக்தி ஒலிம்பிக் தீபம் ஏற்றினாா். தொடா்ந்து நடைபெற்ற 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், வாலிபால், கால்பந்து, கபடி உள்ளிட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்வி புரவலா் சோ்க்கை, வைரவிழா நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஞானகெளரி தலைமை வகித்தாா்.

கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் மாரியப்பன், திட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட கல்வி புரவலா் குழு உறுப்பினராக சோ்ந்தனா். மாணவா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நடராஜன், உதவி தலைமைாசிரியை கலைச்செல்வி, ஊராட்சித் தலைவா்கள் மல்லிகா, செண்பகவள்ளி, கற்பகவள்ளி, சக்கம்மாள், ஜெயலட்சுமி, வேல்கனி, முத்துமணி, ராமசாமி, ஜெயலட்சுமி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தலைமையாசிரியா் முத்துக்குமாா் வரவேற்றாா். முன்னாள் மாணவா் சங்கச் செயலா் சரவணக்குமாா் நன்றி கூறினாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com