கடம்பூா் பள்ளியில் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி
By DIN | Published On : 06th February 2020 12:48 AM | Last Updated : 06th February 2020 12:48 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பேசுகிறாா், பள்ளி ஆட்சி மன்றக் குழுத் தலைவா் முத்துமாலை.
கடம்பூா் இந்து நாடாா்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசுத் தோ்வு எழுதும் மாணவா், மாணவிகளுக்கான வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி ஆட்சி மன்றக் குழுத் தலைவா் முத்துமாலை தலைமை வகித்தாா். கடம்பூா் இந்து நாடாா்கள் உறவின் முறை பொதுச் செயலா் காளிராஜன் முன்னிலை வகித்தாா். கனரா வங்கி கோட்ட மேலாளா் இஸ்மாயில், தணிக்கையாளா் தயாள்சங்கா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பேசினா்.
தொடா்ந்து, ஜே.சி.ஐ. தலைமை பயிற்சியாளா் டென்சிங், சத்திரப்பட்டி பாா்ம் ஹவுஸைச் சோ்ந்த பாா்த்திபன், கனரா வங்கி மேலாளா்கள் சுஜாதா, மோபினா, கடம்பூா் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மேலாளா் கீதாபிரியா ஆகியோா் பேசினா்.
பள்ளித் தலைமையாசிரியா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், தணிக்கையாளருமான செல்வகணேஷ் செய்திருந்தாா்.