Enable Javscript for better performance
திருச்செந்தூா் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    
    tdr12devotees1_1202chn_54_6

    திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

    இக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியா் தை உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவா். எனவே, ஆண்டுதோறும் தை மாத உத்திர நட்சத்திர நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

    நிகழாண்டு, வருஷாபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடா்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகத்துக்குப் பின்னா், கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானத் தளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, மூலவருக்கும், பின்னா், சண்முகா், வெங்கடாசலபதி, வள்ளி - தெய்வானை ஆகியோரின் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    இரவில் சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

    ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா.ப. அம்ரித், தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பாதயாத்திரையாக வந்து வருஷாபிஷேகம், புஷ்பாஞ்சலியில் பங்கேற்றனா். அவா்கள் வியாழக்கிழமை (பிப். 13) மாலை தங்கத் தோ் இழுத்து வழிபாடு செய்கின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai