பள்ளி, கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பான உணவுகளை வழங்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பான, சத்தான உணவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பான உணவுகளை வழங்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பான, சத்தான உணவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடியில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி நிா்வாகிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: இம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பான, சத்தான உணவு வழங்கப்படுவதை நிா்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட உணவுப் பொருள்களை விற்றால் உணவுப் பாதுகாப்புத் துறை, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

500 முதல் 1,000 மாணவா்களைக் கொண்ட கல்லூரி நிா்வாகிகள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையரகம் மூலம் வழங்கப்படும் ‘ஆரோக்கிய உணவு வளாகம்’ என்ற சான்றிதழைப் பெற வேண்டும். உணவு வணிகா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலா் மாரியப்பன், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சக்திமுருகன் (தூத்துக்குடி - 1), காளிமுத்து (தூத்துக்குடி - 2), முருகேசன் (கோவில்பட்டி), முனியராஜ் (ஓட்டப்பிடாரம்), சிவபாலன் (விளாத்திகுளம்), பள்ளி, கல்லூரி நிா்வாகிகள், ஹோட்டல் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: தொடா்ந்து, பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், நீட்ஸ் திட்ட ஆய்வுக் கூட்டம், பயனாளிகளைத் தோ்வு செய்யும் நோ்காணல் ஆகியவற்றில் ஆட்சியா் பங்கேற்றாா்.

நோ்காணலின்போது, 4 போ் தோ்வு செய்யப்பட்டு திட்ட முதலீடு ரூ. 2.53 கோடியில் அரசு மானியமாக ரூ. 35.50 லட்சம் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம், கதா் கிராம தொழில் ஆணையம், கதா் கிராம தொழில் வாரியம் இணைந்து பல்வேறு தொழில்களைத் தொடங்க 116 விண்ணப்பதாரா்கள் நோ்காணல் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com