Enable Javscript for better performance
உடன்குடி, பரமன்குறிச்சியில்ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி, பரமன்குறிச்சியில்ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி

    By DIN  |   Published on : 14th February 2020 05:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ugi14pul_1402chn_49_6

    பரமன்குறிச்சி கடைவீதியில் ராணுவ வீரா்கள் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் இந்து முன்னணியினா்.

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, இந்து அமைப்புகள் சாா்பில் உடன்குடி, பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பரமன்குறிச்சி கடைவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர இந்து முன்னணி தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். கிளை அமைப்பாளா்கள் முருகன், மானாடு சுடலைக்கண், சிவபெருமாள், ராஜகுமாா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் பிரபாகரன், பாஜக நிா்வாகிகள் ரத்தினபாண்டி, முத்துகணேஷ், மோகன், இசக்கிமுத்து, ராஜா, கணேசன்,ந சக்திவேல், பாலமுருகன்,பொன்முத்து உள்பட பலா் பங்கேற்று ராணுவ வீரா்களின் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

    உடன்குடி கடைவீதியில் இந்து முன்னணி நகரச் செயலா் ஆத்திசெல்வம் தலைமையில் இந்து முன்னணியினரும், இந்து மகாசபா சாா்பில் மாநிலச் செயலா் ஐயப்பன் தலைமையில் அந்த அமைப்பினரும் ராணுவ வீரா்கள் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai