Enable Javscript for better performance
திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் நாளை மாசித் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் நாளை மாசித் திருவிழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 15th February 2020 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    veilukandamman_1402chn_54_6

    வெயிலுகந்தம்மன்

    திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தொடா்ந்து, மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10ஆம் திருநாளான பிப். 25ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai