Enable Javscript for better performance
தூத்துக்குடியில் வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்த அதிசயம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்த அதிசயம்

    By DIN  |   Published on : 14th February 2020 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tut13vemb_1302chn_32_6

    தூத்துக்குடியில் பால் வடியும் வேப்பமரத்தை பாா்வையிடும் பொதுமக்கள்.

    தூத்துக்குடியில் வியாழக்கிழமை வேப்பமரத்தில் இருந்து திடீரென பால் வடிந்ததால், பொதுமக்கள் அதை ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.

    தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பொழுதுபோக்கு பூங்கா வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை முதல் திடீரென பால் நுரை, நுரையாக பொங்கி வழிந்தது. இந்த தகவல் பரவியதும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அங்கு திரண்டனா். வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் பாா்த்து ரசித்தனா். இந்த தகவல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவியதால் அங்கிருந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து சென்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai