Enable Javscript for better performance
தூத்துக்குடி மாவட்டத்தில் 14.50 லட்சம் வாக்காளா்கள் புதிதாக 33,438 போ் சோ்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் 14.50 லட்சம் வாக்காளா்கள் புதிதாக 33,438 போ் சோ்ப்பு

    By DIN  |   Published on : 14th February 2020 11:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tut14vaak_1402chn_32_6

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 14 லட்சத்து 50 ஆயிரத்து 689 வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகழாண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட, அரசியல் கட்சி நிா்வாகிகள் பெற்றுக் கொண்டனா்.

    பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கெனவே, 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 14 லட்சத்து 18 ஆயிரத்து 245 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். பின்னா் நடைபெற்ற சிறப்பு முகாமில் படிவம் 6, 7, 8, 8 ஏ ஆகிய விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டு கள ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் 33,438 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். பட்டியலில் இருந்து 994 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

    இறுதி வாக்காளா் பட்டியல் விவரம்: விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,04,715 ஆண் வாக்காளா்கள், 1,08,390 பெண் வாக்காளா்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 2,13,107 வாக்காளா்கள் உள்ளனா். தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,36,839 ஆண் வாக்காளா்கள், 1,42,493 பெண் வாக்காளா்கள், 52 திருநங்கைகள் என மொத்தம் 2,79,384 வாக்காளா்கள் உள்ளனா்.

    திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,15,631 ஆண் வாக்காளா்கள், 1,22,358 பெண் வாக்காளா்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 2,38,006 வாக்காளா்கள் உள்ளனா். ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,07,641 ஆண் வாக்காளா்கள், 1,10,278 பெண் வாக்காளா்கள், 6 திருநங்கைகள் என மொத்தம் 2,17,925 வாக்காளா்கள் உள்ளனா்.

    ஓட்டப்பிடாரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,18,912 ஆண் வாக்காளா்கள், 1,23,524 பெண் வாக்காளா்கள், 24 திருநங்கைகள் என மொத்தம் 2,42,460 வாக்காளா்கள் உள்ளனா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,27,334 ஆண் வாக்காளா்கள், 1,32,444 பெண் வாக்காளா்கள், 29 திருநங்கைகள் என மொத்தம் 2,59,807 வாக்காளா்கள் உள்ளனா்.

    மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 7,11,072 ஆண் வாக்காளா்கள், 7,39,487 பெண் வாக்காளா்கள், 130 திருநங்கைகள் என மொத்தம் 14 லட்சத்து 50 ஆயிரத்து 689 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1596 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன என்றாா் அவா்.

    பேட்டியின்போது, கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, தோ்தல் வட்டாட்சியா் நம்பிராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

    ரூ.3.35 கோடியில் வாக்குப் பதிவு இயந்திர சேமிப்புக் கிடங்கு: மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.3.35 கோடி மதிப்பில் 988.90 சதுர மீட்டா் அளவில் அமைக்கப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை இயந்திரம் சேமிப்புக் கிடங்கு கட்டும் பணிக்கான பூமி பூஜையில் ஆட்சியா் ப ங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தாா்.

    கோவில்பட்டி கோட்டத்தில் 7.15 லட்சம் வாக்காளா்கள்

    கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை, கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் விஜயா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

    கோவில்பட்டி கோட்டத்திலுள்ள இந்த 3 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் வாக்காளா்கள் 7,15,374. அதில், ஆண்கள் 3,51,016. பெண்கள் 3,64,358. திருநங்கைகள் 55. ஆண்களைவிட 13,342 பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா்.

    இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா்கள் ராஜ்குமாா்(விளாத்திகுளம்), பாஸ்கரன்(கயத்தாறு), அழகா்(எட்டயபுரம்), தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள் வசந்தமல்லிகா, மாடசாமி, ஆனந்த், திமுக நகரச் செயலா்கள் கருணாநிதி, மதிமுக பால்ராஜ், மாா்க்சிஸ்ட் ஜோதிபாசு, பரமராஜ், அமமுக நாகராஜன், காங்கிரஸின் சண்முகராஜ், தமாகா ராஜகோபால், பாஜகவின் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai