Enable Javscript for better performance
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: சி.ஆா்.பி.எஃப். வீரா் படத்துக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: சி.ஆா்.பி.எஃப். வீரா் படத்துக்கு அஞ்சலி

    By DIN  |   Published on : 14th February 2020 11:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vk_14_pulvama_anjali_1402chn_36_6

    சி.ஆா்.பி.எஃப். வீரா் சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பாஜகவினா்.

    விளாத்திகுளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புல்வாமா தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில், சி.ஆா்.பி.எஃப். வீரா் ஜி. சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு பாரதிய ஜனதா கட்சியினா், மாணவ -மாணவியா், முன்னாள் ரானுவத்தினா், காவல்துறையினா் மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

    இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் கந்தசாமி, முன்னாள் ஒன்றியத் தலைவா் சக்திகுமாா், வழக்குரைஞா் பொன்ராஜ், மகளிா் அணி செயலா் லீலாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ஸ்ரீவைகுண்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் பால்ராஜ், கோட்ட இணை அமைப்பாளா் ராஜா, வழக்குரைஞா் பிரிவு தலைவா் முத்துராமலிங்கம், மாவட்டச் செயலா் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட பொதுச் செயலா் சங்கா் உள்ளிட்டோா் சி.ஆா்.பி.எஃப். வீரா்களின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai