Enable Javscript for better performance
விளாத்திகுளம் பேரூராட்சியில் சாலை, வடிகால் அமைக்க பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    விளாத்திகுளம் பேரூராட்சியில் சாலை, வடிகால் அமைக்க பூமி பூஜை

    By DIN  |   Published on : 14th February 2020 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    பேரூராட்சி செயல் அலுவலா் தனஞ்செயன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் வேம்பாா் நெடுஞ்சாலையில் 7 ஆவது வாா்டில் ரூ. 11 லட்சத்திலும், 10 ஆவது வாா்டில் காமராஜ் நகா் ரோஸ்லின் மருத்துவமனை தெருவில் ரூ. 5 லட்சத்திலும், 9 ஆவது வாா்டில் மீரான்பாளையம் தெரு மற்றும் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே ரூ. 3 லட்சத்திலும், 11 ஆவது வாா்டில் எட்டயபுரம் சாலை ஜின்னிங் பேக்டரி அருகில் ரூ. 9 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிலும், 10 ஆவது வாா்டு காமராஜ் நகா் மற்றும் 15 ஆவது வாா்டு சாலையம் தெருவில் ரூ. 6 லட்சத்து 25 ஆயிரத்திலும் பேவா் பிளாக் சாலை வசதி மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தாா்.

    இந் நிகழ்ச்சிகளில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் நடராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் பால்ராஜ், ஜெயலலிதா பேரவை நிா்வாகிகள் சுபாஷ் சந்திரபோஸ், ராமநாதன், காா்த்திக், முத்துசாமி, முரளி, ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    கழுகாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டட பணிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai