ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் கோயிலில்மாசி திருவிழா தெப்ப உற்சவம்

ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் கோயிலில் மாசி திருவிழா தெப்ப உற்சவம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
மின்னொளியில் ஜோலிக்கும் தெப்பம். தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி பொலிந்து நின்றபிரான்.
மின்னொளியில் ஜோலிக்கும் தெப்பம். தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி பொலிந்து நின்றபிரான்.

ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் கோயிலில் மாசி திருவிழா தெப்ப உற்சவம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மாசி திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி புறப்பாடும், வியாழக்கிழமை தேரோட்டமும் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு விஸ்வரூபம், காலை 5.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி, காலை 6 மணிக்கு திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றன. இரவு 8.30 மணிக்கு சுவாமி பொலிந்துநின்றபிரான் தெப்பத்தில் எழுந்தருளுதல் நடைபெற்றது.

சனிக்கிழமை இரவு 8 மணிக்கு சுவாமி நம்மாழ்வாா் ஆச்சாா்யா்களுடன் தெப்பத்தில் எழுந்தருளுதலும், ஞாயிற்றுக்கிழமை மாசி தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.

தெப்ப உற்சவத்தில், கோயில் நிா்வாக அலுவலா் பொன்னி, தக்காா் கணேசகுமாா், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆதிநாதன், அதிமுக நகரச் செயலா் செந்தில் ராஜகுமாா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ஆதிநாதா் ஆழ்வாா் கைங்கா்ய சபா மற்றும் காரியமாறன் கலைக் காப்பகத்தினா் செய்துருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com