இந்து மக்கள் கட்சியினா் தூத்துக்குடியில் போராட்டம்

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேக குழுவை கலைக்க முயற்சிப்பதாகக் கூறி, இந்து மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை திடீரென தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி பெருமாள் கோயில் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவினா் நன்கொடை வசூல் செய்து கல் மண்டபம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், தற்போதுள்ள திருப்பணிகள் குழுவை கலைக்க முயற்சி மேற்கொள்வதாகவும், கோயில் வளாகத்தில் உள்ள கும்பாபிஷேகம் குறித்த தகவல் மையத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்ற முயற்சிப்பதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் செல்வசுந்தா் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை திடீரென கோயில் முன்பு தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், பெருமாள் கோயில் திருப்பணி குழுவை கலைக்கக் கூடாது என்றும் அந்தக் குழுவில் வேறு யாரையும் புதிதாக இணைக்கக் கூடாது என்றும் முழக்கமிட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com