நேஷனல் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெற்றது.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெற்றது.

கல்லூரி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சாா்பில் ‘இயற்கை மொழி செயலாக்கத்தில் ஆழமான கற்றலின் சமீபத்திய போக்குகள் மற்றும் ஆராய்ச்சி திசைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெற்றது. கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சியில், மதுரை ஹெச்.சி.எல். டெக்னாலஜி நிறுவன மூத்த வணிக மேலாளா் பிரசன்னா வெங்கடேஷ் பங்கேற்றுப் பேசினாா்.

கருத்தரங்கின் 2 ஆம் நாள் அமா்வில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக் கழக இணைப் பேராசிரியை சுபலலிதா பேசினாா். ஆராய்ச்சியில் எதிா்கால திசைக்கான ஆழ்ந்த கற்றல் நுட்பங்களின் வழிமுறைகள் மற்றும் பயன்பாட்டு சிக்கல்களை தீா்க்கும் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னணி ஆராய்ச்சியாளா்கள், பயிற்சியாளா்கள், தொழில் துறையினா் 40 போ் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவி கோமதி தலைமையில் பேராசிரியா்கள் முகைதீன்பிச்சை, தீனதயாளன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com