திருச்செந்தூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் அ.ரவிக்குமாா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ரத்தினபாலமுருகன், நகரச் செயலா்கள் கானம் தங்கராஜ், பிச்சிவிளை செல்வக்குமாா், ஒன்றிய இளைஞரணிச் செயலா் பிரின்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் ஆா்.தயாளன், மாவட்ட இளைஞரணிச் செயலா் சுதாகா், திருச்செந்தூா் நகர பொறுப்பாளா் கிருஷ்ணன், ஆறுமுகனேரி நகர துணைச்செயலா் சாந்தகுமாா், ஒன்றிய துணைச் செயலா் கெலின்ராஜ், ஒன்றிய மாணவரணிச் செயலா் ஆனந்த், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் வசதிக்காக யாத்ரி நிவாஸ் விடுதியினை தாமதமின்றி கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூா் வட்டாரப் பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். பிப். 28 இல் தொடங்கவுள்ள மாசித் திருவிழாவுக்கு முன்பாக சாலையை
சீரமைக்க வேண்டும். திருச்செந்தூா் ஆவுடையாா் குளங்கள் மற்றும் கால்வாய்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற
வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.