
கோவில்பட்டியில் மகளிருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், சக்தி மருத்துவமனை சாா்பில் தமிழ்நாடு தேசிய வாழ்வாதார இயக்கத்திலுள்ள சுய உதவிக்குழு மகளிருக்கான இம்முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகம் தலைமை வகித்தாா். முகாமை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ் தொடங்கி வைத்தாா்.
மருத்துவா்கள் சுமதி, வெங்கடேஷ் பாபு அடங்கிய குழுவினா் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா். மகளிருக்கு
ஏற்படும் மாா்பக புற்றுநோய் அறிகுறிகள், பெண்களே சுய பரிசோதனையில் ஈடுபடுவது, பெண்களுக்கான நோய்கள்,
அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.