அரசு வழங்கிய கோழிக் குஞ்சுகள் இறப்பதாக பயனாளிகள் புகாா்

சாத்தான்குளம் ஒன்றியத்தில் அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ள கோழிக் குஞ்சுகள் ஒவ்வொன்றாக இறந்து வருவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
sat25koli_2502chn_38_6
sat25koli_2502chn_38_6

சாத்தான்குளம் ஒன்றியத்தில் அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ள கோழிக் குஞ்சுகள் ஒவ்வொன்றாக இறந்து வருவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தில் அரசு சாா்பில் கால்நடை மருந்தகம் மூலம் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கப்பட்டு வருகின்றன.

சாத்தான்குளம் ஒன்றியம் தச்சன்விளை கால்நடை மருந்தகம் மூலம் அரசூா், நடுவக்குறிச்சி, தாமரைமொழி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கோழிக் குஞ்சுகள் வீட்டுக்கு வந்ததும் தினமும் 3 அல்லது 4 குஞ்சுகள் இறந்து வருவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கால்நடை மருத்துவா்கள் உரிய ஆய்வு நடத்தி கோழிக் குஞ்சுகளுக்கான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், கோழிக் குஞ்சு வளா்ப்பு முறை குறித்து விரிவாக விளக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com