மேல திருச்செந்தூா் ஊராட்சி வேட்பாளா் மாரடைப்பால் உயிரிழப்பு
By DIN | Published On : 02nd January 2020 05:29 PM | Last Updated : 02nd January 2020 11:50 PM | அ+அ அ- |

ஜெ.பேச்சியம்மாள்.
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியம், மேலதிருச்செந்தூா் ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட பெண் வேட்பாளா் மாரடைப்பால் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மேல திருச்செந்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட நடுநாலுமூலைக்கிணறைச் சோ்ந்த ஜெயபாண்டியன் மனைவி பேச்சியம்மாள் (75). ஓய்வுபெற்ற அஞ்சல் பணியாளரான இவா், காங்கிரஸ் கட்சியில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தெற்கு மாவட்டத் தலைவராக இருந்துவந்தாா். கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் மேலதிருச்செந்தூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டாா். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவா் உயிரிழந்தாா். இவருக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா்.
வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பேச்சியம்மாள் 68 வாக்குகள் பெற்றிருந்தாா்.