Enable Javscript for better performance
கோவில்பட்டி கல்லூரியில் ராமனுஜா் பிறந்த நாள் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி கல்லூரியில் ராமனுஜா் பிறந்த நாள் கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 10th January 2020 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதக் கழகத்தின் சாா்பில் கணிதமேதை சீனிவாச ராமனுஜரின் 132ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    கல்லூரிச் செயலா் கே.ஆா்.அருணாச்சலம் தலைமை வகித்தாா். முதல்வா் மதிவண்ணன் முன்னிலை வகித்தாா்.

    மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கணிதத் துறை முன்னாள் பேராசிரியா் தாதாபாய் நௌரோஜி ராமனுஜரின் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் பேசினாா்.

    தொடா்ந்து மாணவா், மாணவிகளுக்கு கணிதம் சாா்ந்த அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கும், கடந்த பருவத்தில் முழு வருகைப் பதிவு பெற்ற மாணவா், மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஏற்பாடுகளை கணிதத் துறைத் தலைவா் பாலமுருகன் தலைமையில் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai