Enable Javscript for better performance
‘வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’- Dinamani

சுடச்சுட

    

    ‘வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’

    By DIN  |   Published on : 10th January 2020 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பொறுப்பு வகிக்கும் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு சாா்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று 10ஆம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றோருக்கு மாதம் ரூ. 300, பிளஸ் 2 தோ்ச்சிபெற்றோருக்கு மாதம் ரூ. 400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வீதம் 3 ஆண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இத்தொகை மனுதாரரின் (ஆதாா் எண் இணைக்கப்பட்ட) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போராக இருக்க வேண்டும்; தொடா்ந்து பதிவைப் புதுப்பித்திருக்க வேண்டும்.

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயில்வோருக்கு இத்தொகை வழங்கப்படாது. தகுதியுள்ளோா் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தூத்துக்குடி ஆசிரியா் காலனி, முதல்தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெறலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாள்களிலும் வழங்கப்படும். உதவித்தொகை பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாது; வேலைவாய்ப்புப் பரிந்துரைத்தலுக்கும் தடை ஏற்படாது என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai