ஜன. 19 இல் 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக ஜன.19 ஆம் தேதி 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
ஜன. 19 இல் 1.35 லட்சம்  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக ஜன.19 ஆம் தேதி 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துதல் தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஜன. 19 ஆம் தேதி 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின்போது ஏறத்தாழ ஒரு லட்சத்து 35 ஆயிரத்து

629 குழந்தைகள் பயன்பெற உள்ளனா். மேலும், போலியோ சொட்டு மருந்து வழங்க 1,222 மையங்கள் செயல்பட உள்ளன. நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயா்ந்து வருபவா்களில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

மேலும், போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொதுசுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளா்களுடன் பிறதுறை பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5,238 பணியாளா்கள் பணியாற்ற உள்ளனா் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் தனலட்சுமி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் உமாசங்கா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகௌரி, தொழுநோய் பிரிவு துணை இயக்குநா் யமுனா, உறைவிட மருத்துவா் பூவேஸ்வரி மற்றும் அலுவலா்கள், தன்னாா்வ தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com