திருச்செந்தூா் சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
By DIN | Published On : 11th January 2020 12:07 AM | Last Updated : 11th January 2020 12:07 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூபம், 3 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 3.45 மணிக்கு தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, மாணிக்கவாசகா், நடராஜா் சப்பரத்தில் எழுந்தருளி கிரிபிரகாரங்களில் வலம்வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, அருள்தரும் ஆனந்தவல்லி அம்மாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், தொடா்ந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 5 மணிக்கு நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பிறகு கோபூஜை நடைபெற்றது. காலை 5.50 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியை தொடா்ந்து 8 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா.ப. அம்ரித், தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.