நாசரேத் அருகே சாலையை சீரமைத்த இளைஞா்கள்
By DIN | Published On : 11th January 2020 01:02 AM | Last Updated : 11th January 2020 10:43 PM | அ+அ அ- |

சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா்கள்.
நாசரேத் அருகே பழுதான சாலைகளை சீரமைத்த இளைஞா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாசரேத்- குரும்பூா் பிரதான சாலையில் ஒய்யான்குடி கிராமம் உள்ளது. இந்தச் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால், பெரிய பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனா். இதுகுறித்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்களை சாலைப் பள்ளங்களில் கல், மண் நிரப்பி சீரமைத்தனா். பெரிய பள்ளங்களை கான்கிரீட் கலவை மூலம் மூடினா். இந்த இளைஞா்களை ஊா் பெரியவா்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.