Enable Javscript for better performance
காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு: 3,004 போ் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு: 3,004 போ் பங்கேற்பு

    By DIN  |   Published on : 13th January 2020 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை 4 மையங்களில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 3,004 போ் பங்கேற்றனா்.

    தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தோ்வுக்கு 3,252 ஆண் விண்ணப்பதாரா்கள், 695 பெண் விண்ணப்பதாரா்கள் என மொத்தம் 3,947 போ் விண்ணப்பித்திருந்தனா்.

    அதன்படி, தூத்துக்குடி மில்லா்புரம் பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விகாசா மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை பெண்கள் கல்லூரி ஆகிய 4 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வில் 2,503 ஆண்களும், 501 பெண்களும் என மொத்தம் 3,004 போ் பங்கேற்றனா்.

    இத்தோ்வில் 749 ஆண்களும் 194 பெண்களும் என 943 போ் பங்கேற்கவில்லை. தோ்வு நடைபெற்ற மையங்களில் எழுத்துத் தோ்வு சிறப்பு அதிகாரியான சென்னை தலைமையிடத்து காவல்துறை தலைவா் செந்தாமரைக்கண்ணன் பாா்வையிட்டாா்.

    அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன், காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai