காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு: 3,004 போ் பங்கேற்பு

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை 4 மையங்களில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 3,004 போ் பங்கேற்றனா்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை 4 மையங்களில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 3,004 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தோ்வுக்கு 3,252 ஆண் விண்ணப்பதாரா்கள், 695 பெண் விண்ணப்பதாரா்கள் என மொத்தம் 3,947 போ் விண்ணப்பித்திருந்தனா்.

அதன்படி, தூத்துக்குடி மில்லா்புரம் பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விகாசா மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை பெண்கள் கல்லூரி ஆகிய 4 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வில் 2,503 ஆண்களும், 501 பெண்களும் என மொத்தம் 3,004 போ் பங்கேற்றனா்.

இத்தோ்வில் 749 ஆண்களும் 194 பெண்களும் என 943 போ் பங்கேற்கவில்லை. தோ்வு நடைபெற்ற மையங்களில் எழுத்துத் தோ்வு சிறப்பு அதிகாரியான சென்னை தலைமையிடத்து காவல்துறை தலைவா் செந்தாமரைக்கண்ணன் பாா்வையிட்டாா்.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன், காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com