Enable Javscript for better performance
கோவில்பட்டி பகுதியில் நாளை மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி மின்வாரிய கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.18) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) எஸ்.முனியசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கோவில்பட்டி கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜன.18) மின் விநியோகம் இருக்காது.

    காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: கழுகுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆா்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வென்றான் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம்,கடம்பூா், ஒட்டநத்தம், குளத்தூா், சூரங்குடி ஆகிய பகுதிகள், செட்டிக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளங்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூா்த்தீஸ்வரபுரம் ஆகிய பகுதிகள் மற்றும் சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, தலையால்நடந்தான்குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூா், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியங்குளம், என்.புதூா், நாரைகிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒரு பகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூா், காங்கீஸ்வரன்புதூா், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை மற்றும் காற்றாலை மின்தொடா் 1, 2 ஆகிய பகுதிகள்.

    பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முஹம்மதுசாலிஹாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி ஆகிய பகுதிகள், விஜயாபுரி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட திட்டங்குளம், பாண்டவா்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூா், காமநாயக்கன்பட்டி, சிட்கோ துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட முத்துநகா், சிட்கோ, ஜோதி நகா், புதுரோடு ஆகிய பகுதிகள், எம்.துரைச்சாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட வானரமுட்டி, காளாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூா், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்த்தலைவன்பட்டி, சிவஞானபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சிவஞானபுரம், வாகைதாவூா், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai