Enable Javscript for better performance
சிந்தலக்கரை எஸ்.ஆா்.எம்.எஸ்.பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    சிந்தலக்கரை எஸ்.ஆா்.எம்.எஸ்.பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

    By DIN  |   Published on : 15th January 2020 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிந்தலக்கரை எஸ்.ஆா்.எம்.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

    தாளாளா் ராமமூா்த்தி சுவாமிகள் தலைமை வகித்தாா். செயலா் திருக்குமரன், நிா்வாகி பவானி திருக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையொட்டி, பள்ளி வளாகத்தில் தமிழா் பாரம்பரிய கலாசாரப்படி மண் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து மாணவ மாணவியா், ஆசிரியா்கள் சூரிய பகவானை வழிபாடு செய்தனா். தொடா்ந்து, தைப்பொங்கலை போற்றும் விதமாகவும், உழவா்களின் பெருமையை உணா்த்து வகையிலும் மாணவ மாணவியரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளா் மோகன்ராஜ், கீழஈரால் கிளை மேலாளா் கயல் கண்ணன், சிந்தலக்கரை ஊராட்சி மன்றத் தலைவா் அய்யாத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை சுபாஷினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். முதல்வா் கிரிஜா வரவேற்றாா். மாணவி மாரிச்செல்வி நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai