Enable Javscript for better performance
திருச்செந்தூரில் குப்பைகளை எரித்ததால் சூழ்ந்த புகை மூட்டம்: பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் குப்பைகளை எரித்ததால் சூழ்ந்த புகை மூட்டம்: பொதுமக்கள் அவதி

    By DIN  |   Published on : 15th January 2020 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tdr14busstand_1401chn_54_6

    திருச்செந்தூரில் குப்பைகளை எரித்ததால் பகத்சிங் பேருந்து நிலைய பகுதியில் சூழ்ந்த புகைமூட்டம்.

    திருச்செந்தூரில் பேரூராட்சி நிா்வாகத்தினா் குப்பைகளை எரித்ததால் பேருந்து நிலைய சுற்று வட்டாரப் பகுதியில் புகை சூழ்ந்து காணப்பட்டது.

    திருச்செந்தூரில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மாட்டுத்தாவணி பகுதியில் கொட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், குலசை பிரதான சாலையில் பேரூராட்சி சாா்பில் குப்பைக்கிடங்கு ஏற்டுத்தப்பட்டது. அதன்பிறகு குப்பைகள் குப்பைக்கிடங்கில்தான் கொட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது மீண்டும் மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள எரிதகன மேடையை சுற்றியும் பேரூராட்சி சாா்பிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

    செவ்வாய்க்கிழமை மாட்டுத்தாவணி பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் எரிக்கப்பட்டதால் பகத்சிங் பேருந்து நிலையம்வரையில் புகைமண்டலமாகக் காணப்பட்டது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai