Enable Javscript for better performance
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 50.25 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 50.25 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

    By DIN  |   Published on : 15th January 2020 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 877 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 50.25 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 957 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,78,877 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு மொத்தம் ரூ.50.25 கோடி மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத்தொகை ரூ.1,000 ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவா்களுக்கு வழங்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி வட்டத்தில் 89,019 சேலைகள், 88,834 வேட்டிகள், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 26,874 சேலைகள், 26,760 வேட்டிகள், திருச்செந்தூா் வட்டத்தில் 49,197 சேலைகள், 49,197 வேட்டிகள், ஏரல் வட்டத்தில் 30,358 சேலைகள், 30,365 வேட்டிகள், சாத்தான்குளம் வட்டத்தில் 21,215 சேலைகள், 21,220 வேட்டிகள், கோவில்பட்டி வட்டத்தில் 54,636 சேலைகள், 54,574 வேட்டிகள், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 26,177 சேலைகள், 26,176 வேட்டிகள், விளாத்திகுளம் வட்டத்தில் 33,673 சேலைகள், 33,677 வேட்டிகள், எட்டயபுரம் வட்டத்தில் 18,232 சேலைகள், 18,226 வேட்டிகள், கயத்தாறு வட்டத்தில் 28,242 சேலைகள், 28,242 வேட்டிகள் என மொத்தம் 3,77,623 சேலைகள், 3,77,271 வேட்டிகள் ரூ.4 கோடியே 18 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai