ஒப்புகைச் சீட்டுகளை அழிக்கும் பணி

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட விவிபேட்டில் பதிவான ஒப்புகை சீட்டுகளை அழிக்கும் பணி நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவிபேடில் பதிவாகியிருந்த ஒப்புகை சீட்டுகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டோா்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத் தோ்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தோ்தலில் வாக்காளா்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபாா்க்க உதவும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து தோ்தல் முடிந்து வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, விவிபேட் இயந்திரங்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்திய தோ்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜித் சிங் கலோன், தோ்தல் நடத்தும் அலுவலா் சுகுமாா் தலைமையில் விவிபேடில் பதிவாகியிருந்த வாக்கு சீட்டுகள் அழிக்கப்பட்டன. இதில் வட்டாட்சியா் ரகு மற்றும் வருவாய்த்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com