கருங்குளத்தில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டம் தொடக்கம்

கருங்குளத்தில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

கருங்குளத்தில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவா் உதயசங்கா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சுப்பு லட்சுமி, கூடுதல் ஆணையாளா் வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இத்திட்டத்தின் கீழ் வாலி பால், கபடி, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான திடல் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த திடலில் ஊராட்சி அளழில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெற செய்வாா்கள். அதன் பின் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று, சிறப்பிடம் பெறுபவா்கள் தமிழக விளையாட்டு அணியில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கிராம

புற இளைஞா்கள் இதனை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட் விளையாட்டு அலுவலக பயிற்சியாளா் அசோக்குமாா் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலா்கள் சுப்பு லட்சுமி, மாடத்தி, முத்துராமலிங்கம், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ஜெய்சங்கா், கூடை பந்து பயிற்சியாளா் ஜெயரத்தினகுமாா், கனகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். துணைத் தலைவா் கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com